Wednesday, September 7, 2016

mosadi

தொடர்ந்து வரும் நில மோசடி குற்றங்கள்,  நில அபகரிப்பு சட்டம்  நடைமுறையில் இருந்தும்,  மோசடி   மன்னர்களால்  போலி பத்திரப்பதிவு போலி கையெழுத்து  போலி மருத்துவ சான்று என  நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகில் உள்ள  களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நில தரகர்கள்  வசந்த் , சிவகுமார்  ,குட்டி என்கின்ற சுப்பிரமணி எனும் இம்மூவரால் பத்திரப்பதிவு மோசடி நடந்தேறியுள்ளது .

     பத்திரப்பதிவு துறையில் விஜிலன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுகிறது ? . இவர்கள் அதே ஊரில் பலரை ஏமாற்றியுள்ளனர், யாரும் புகார் தர முன்வருவதில்லை  காரணம், ஊர் கட்டுப்பாடு ,  கட்டப்பஞ்சாயத்து.
 . களத்தூரில் பூர்வீகமாக வசித்து தற்போது காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் கைலாசம் என்கின்ற முதியவரை நில மோசடி செய்துள்ளனர் . இம்மூவரில்  வசந்த் மற்றும் குட்டி  இருவரும் சிவகுமார் மீது பவர் அதிகாரம் செய்துள்ளனர் . கைலாசத்திடம் நிலத்தை விற்றுத்தருவதாக  சொல்லி , 31.3.2016 அன்று 21 சென்ட்டு  நிலத்திற்கு பவர் பெற்று 6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் அதிகார பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர்.

பிறகு காஞ்சிபுரத்திலுள்ள நிலத்தரகர் மூலம்    சென்னையில் உள்ள ஒரு பெரும் புள்ளிக்கு  20.7.2016 அன்று 4 ஏக்கர் 77 சென்ட்டு நிலத்தை  நில உரிமையாளருக்கு தெரிவிக்காமல் கிரயப்பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளனர் .  நிலம் வாங்கியவர்க்கும், தரகர்களும் இடையே நில அளவிலும் பணம் பரிமாற்றத்திலும் பிரச்சனை வர இது நில உரிமையாளருக்கும் அவருடைய மகனுக்கும் தெரியவர நிலம்  கிரய ரத்து செய்துள்ளனர் .

இதில் 21 சென்ட்டு நிலத்திற்கு பதிலாக   6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் மோசடி மருத்துவ   சான்றில் கையழுத்து மோசடி ,ஆளில்லாமல் ( Life Certificate ) மருத்துவ  சான்று பெற்றது , இரண்டு  விலாசம் கொடுத்திருப்பது , வாரிசு சான்றில்  திருத்தங்கள் என    ரியல் எஸ்டேட் குற்றங்கள் நடந்துள்ளது . இந்த நில மோசடி செய்தியை நமக்கு கொடுத்தவர்கள் புகார் கொடுக்கவும் சட்டத்தின் முன் வரவும் தயக்கம் காட்டுகின்றனர் .ஆனால் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் .இந்த நில மோசடியின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் ? பெரும் புள்ளிகள் யராவது இருக்கிறார்களா ? என்று காவல்துறை உடனே கண்டுபிடிக்க வேண்டும் . அரசு பதிவுத்துறை விஜிலன்ஸ் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா அல்லது ரியல் எஸ்டேட் குற்றங்கள் தொடருமா என்று பொறுத்திருந்து  அடுத்து வரும் விசாரணையில்  பார்க்கலாம் .